‘மிஷன் இம்பாசிபிள் 7’ டிரெய்லர் ஒன்லைனில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி !

525
Advertisement

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மிஷன் இம்பாசிபிள்’. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. 2018-ஆம் ஆண்டு வெளியான ‘மிஷன் இம்பாசிபிள்: ஃபால்அவுட்’ திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தை கிறிஸ்டோபர் மெக்குயரியிடமே அடுத்த இரண்டு பாகங்களை இயக்கும் பொறுப்பை பாராமவுண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

அதைத்தொடர்ந்து,கொரோனா நெருக்கடியால் திட்டமிட்டபடி ‘மிஷன் இம்பாசிபிள்’ 7 படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.இரண்டு வருட கட்டுப்பாடுகள் முடிந்து படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு,டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகியுள்ளது ‘மிஷன் இம்பாசிபிள்’ 7.

இந்நிலையில் இப்படத்தின் 2 நிமிட  டிரெய்லர்  ஆன்லைனில் கசிந்ததாக கூறப்படுகிறது.டிரெய்லர்  சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதையடுத்து ஸ்டுடியோவால் பதிப்புரிமை மீறல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பெரும்பாலான வீடியோக்கள் அகற்றப்பட்டன.

டிரெய்லர் கடந்த மாதம் CinemaCon இல் திரையிடப்பட்டது ஆனால் பொதுவில் இன்னும் வெளியிடப்படாத நிலையில் இந்த சம்பவம் படக்குழுவை மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது

டிரெய்லர் எப்படி, எங்கிருந்து கசிந்தது என்பது இதுவரை தெரியவில்லை என்றாலும், பாரமவுண்ட் பிக்சர்ஸ் விரைவாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தியது.