TODAY GOLD RATE : இன்றைய (23-09-2025) தங்கம் விலை நிலவரம்

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில்,கடந்த வாரம் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.82,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 149 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி 1,49,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.