தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.81,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,230-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
