தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,270-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 82,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 141 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
