டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

496
Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன.

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு டிஎன்பிஎஸ்சி tnpsc வலைத்தளத்தில் பார்க்கவும்.