தொடங்கியது குரூப் 2 தேர்வு

44

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 12 மையங்களில் குரூப் 2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. . இந்த தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 529 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் குரூப்-2 முதல்நிலை தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Advertisement

தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு  மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4 ஆயிரத்து 12 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 

தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குளறுபடி இன்றி தேர்வு நடத்த 323 பறக்கும் படைகள், 6 ஆயிரத்து 400 ஆய்வு குழுக்கள், 4ஆயிரத்து 12 வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவோரில், ஒரு பதவிக்கு 10 பேர் வீதம் 5 ஆயிரத்து 529 பதவிகளுக்கு 55ஆயிரத்து 290 பேர் செப்டம்பரில் நடைபெறும் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.