திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா அரவங்குறிச்சியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன்.
இவரது மனைவி யோகநாயகி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக முன்கூட்டியே அவரது பெற்றோர் ஊரான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருப்பூர் என்ற கிராமத்திற்கு தனது கணவர் மற்றும் 2 குழந்தையுடன் சென்றுள்ளார்.
கடந்த 21-ந்தேதி சனிக்கிழமை மஞ்சம்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினார்.
தேர்வு முடிந்த பின் பஸ் ஏறுவதற்காக சாலையை கடந்த போது மின்னல் வேகத்தில் வந்த கார் யோகநாயகி மீது மோதி தடுப்புச்சுவரையும் மோதி நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இறந்துபோன யோகநாயகிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.
இவர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டவர். Pinco Türkiye’de online casino heyecanına katılmaya hazır mısınız? Pinco casino size müthiş bir oyun deneyimi sunuyor. En popüler oyunlar, büyük kazanç fırsatları ve sınırsız eğlence burada! Hemen kaydolun ve şansınızı deneyin. Daha fazla bilgi almak için web sitemizi ziyaret edin.
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சென்ற பெண் விபத்தான சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.