TNPL: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது

303
Advertisement

TNPL முதல் தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. TNPL கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது.

இதைதொடர்ந்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சேப்பாக் கில்லீஸ் அணியில், ஜெகதீசன், ராதாகிருஷ்ணன் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

இருப்பினும் கவுசிக் காந்தி, சாய் கிஷோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் சேப்பாக் அணி 4 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது