“மக்களை தேடி மருத்துவம்”

71
tn health minister
Advertisement

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ள 58 ஆயிரத்து 341 பேருக்கு நேரில் சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், நீரிழிவு நோய் உள்ள 36 ஆயிரத்து 775 பேருக்கு வீட்டில் சென்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய இரு நோய் பாதிப்புகளும் உள்ள 25 ஆயிரத்து 787 பேருக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 3 ஆயிரத்து 772 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.