தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்

covid-19
Advertisement

தமிழகத்தில் தினந்தோறும் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 652 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 99 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பெருந்தொற்று பாதிப்பில் இருந்து 25 லட்சத்து 45 ஆயிரத்து 178 பேர் குணமடைந்துள்ள நிலையில், 19 ஆயிரத்து 391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் பெருந்தொற்றுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 34 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.