“திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில்…” – EPS காரசார விவாதம்

eps
Advertisement

சட்டப்பேரவையில் இன்று பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

பேரவை கூடியவுடன் மறைந்த மதுசூதனன் உள்ளிட்ட முன்னாள் 9 சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் மதுரை ஆதீனம், பழங்குடி மக்களுக்காக தொண்டாற்றிய ஸ்டேன் சுவாமி, பெரியாரிய சிந்தனையாளர் ஆனைமுத்து, மருத்துவர் காமேஷ்வரன், தமிழறிஞர் இளங்குமரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பட்ஜெட்மீதான விவாதத்தில் அதிமுக சார்பாக உரையாற்றிய ஆர்.பி.உதயகுமார், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு விவரம் பட்ஜெட்டில் இல்லை என்று தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திமுக ஆட்சியில் முதியோர் உதவித்திட்ட பயனாளிகளின் பெயர் ஏன் நீக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

Advertisement

இதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் 60 சதவிகிதம் கூடுதலாக முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.