திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி

153

திருவண்ணாமலை அரசு நடுநிலைப்பள்ளியில் வளாகத்தில், காய் லீ மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சிலம்ப பயிற்சி பள்ளி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி- 2022 நடைபெற்றது.

இதில், சிலம்பம் பயிற்சி பெற்ற 5 முதல் 22 வயது வரையிலான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமையை  வெளிப்படுத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. சிலம்ப போட்டியை ஏராளமானோர்  கண்டு ரசித்தனர்.

Advertisement