கார் டயர் வெடித்து சாலையோர கல்லில் மோதி விபத்து

216

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் குருமூர்த்தி.

இவர் தனது பதவி உயர்வுக்காக, தனது காரில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக ECR வழியாக வந்து கொண்டிருந்தார்.

குருமூர்த்தி ஓட்டி வந்த கார், புலிக்குகை அருகே வந்தபோது, காரின் வலது பக்க டயர் திடீரென வெடித்தது. நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த கல்லில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

Advertisement

இதில் குருமூர்த்தி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், சுக்குநூறாக நொறுங்கிய காரில் சிக்கி கொண்ட குருமூர்த்தியின் உடலை ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.