மண்டிக்கிடக்கும் புதர்கள் – அகற்ற மக்கள் கோரிக்கை

216

திருப்பூர் அருகே, குடியிருப்பு பகுதியில் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை பழனி ரோட்டில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகே குடியிருப்பு பகுதிகள் உள்ளது.

இந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும், புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே. குடியிருப்பு பகுதியை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.