திருப்பூர் அருகே குடும்பத்தினரை கட்டி போட்டு 40சவரன் நகை மற்றும் 50 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை அடுத்த ராயப்பண்டார வீதியைச் சேர்ந்தவர் சங்மேஸ்வரன்.
பைனான்ஸ் தொழில் செய்து வரும் வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்த படி வீட்டிற்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தி முனையில் அனைவரையும் கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 50 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
தகவலறிந்து வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுனர்களுடன் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.