திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஆதித்யா, தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
பளுதூக்குதலில் கோவையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஏற்கனவே 135 கிலோ தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியதால், அதனை முறியடிக்கும் வகையில், மாணவர் ஆதித்யா, 140 கிலோ பளு தூக்கி, நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் பெற்றார்.
இந்நிலையில், மாணவர் ஆதித்யா, தனது முந்தைய 140 கிலோ சாதனையை முறியடிக்கும் வகையில், 150 கிலோ பளுதூக்கி தனது சாதனையை தானே முறியடித்தார்.
சாதனை படைத்த மாணவர் ஆதித்யாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.