Advertisement
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையோரம் 2 பெண்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேவந்திரம் என்பவர், தூங்கிக்கொண்டிருந்த 2 பெண்களையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், கெளசர் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த தனலட்சுமி என்ற பெண் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, தேவேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.