வெளிச்சத்துக்கு வந்த விதிமீறல்

290

நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 55 கல் குவாரிகளில் ஒன்று தவிர மற்ற அனைத்தும் விதிமீறலில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அமைத்த 6 சிறப்பு குழுக்கள் அனைத்து குவாரிகளிலும் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்துள்ளது.

அதில், நெல்லை மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு அனுமதி பெற்ற அனைத்து கல் குவாரிகளிலும் விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால், விதிமுறைகளை மீறிய 13 கல் குவாரிகளை ஏன் மூடக்கூடாது என்று விளக்க கேட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

41 குவாரிகள் சட்ட விதிகளை மீறி கனிம வளங்கள் எடுத்ததற்கு அபராதம் வசூலிக்குமாறு, அந்தந்த சரக கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத் தொகை 300 கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.