காரில் இருந்து இறங்கிய பெண்ணை இழுத்து சென்ற புலி – உறையவைக்கும் சிசிடிவி  காட்சி 

57
Advertisement

பல பகுதிகளிலிருந்து வரும் வீடியோக்களில்  மக்களை புலி நேரடியாக தாக்குவதை பார்த்துருப்போம்.இந்நிலையில் இந்த வீடியோவில் , பெண் ஒருவரை புலி ஒன்று கவ்வி இழுத்துச்செல்லும் உறையவைக்கும்  காட்சி பதிவாகி உள்ளது.

தகவலின்படி இந்த வீடியோ, 2016 இல் சீனாவின் பெய்ஜிங்கில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்காவிலிருந்து எடுக்கப்பட்டது.தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் பெண் ஒருவர் காரிலிருந்து இறங்கி மறுபுறத்தில்  உள்ளவர்களுடன் வாக்குவாதம் செய்வதுபோல் உள்ளது.

அப்போது , அருகே இருந்த மரங்கள் நிறைந்த பகுதியிலிருந்து புலி ஒன்று அந்த பெண்ணை நோக்கி வந்து அருகே  நிற்கிறது.இதனை உணர்த்த அந்த பெண்  கண்ணிமைக்கும்  நேரத்தில் பெண்ணை கவ்வி இழுத்து சென்றது அந்த புலி.

Advertisement

பெண்ணை காப்பாற்ற காரில் இருந்து இறங்கி  செல்லும் அவரின் குடும்பத்தினரும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளனர்,இதையடுத்து இந்த சம்பவத்தில்  புலி இழுத்துச்செல்லப்பட்ட பெண்ணுக்கு 30 வயது என்றும், தாக்குதலில் இருந்து உயிர் தப்பியதாகவும், ஆனால் 57 வயதான அவரது தாயார் உயிரிழந்துள்ளதாகவும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.