ஆற்றில் கை கழுவ சென்றபோது நேர்ந்த விபரீதம்

186
Malaprabha-River
Advertisement

கர்நாடகாவில் ஆற்றில் கை கழுவ சென்ற போது, நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம் கோட்டேகார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாத்.

இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

Advertisement

அப்போது கை கழுவதற்காக, மலபிரபா ஆற்றில் இறங்கிய போது, எதிர்பாராத விதமாக ஒருவர் ஆற்றில் தவறி விழுந்தார்.

ஒருவரை காப்பாற்றுவதற்காக மற்ற 2 பேரும் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றில் விழுந்துள்ளனர்.

இதில் நீரில் மூழ்கி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், ஒருவரின் சடலத்தை கைப்பற்றிய நிலையில், மற்ற 2 பேரின் உடலையும் தேடி வருகின்றனர்.