“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கவேண்டியது இல்லை”

506
sterlite
Advertisement

ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாததால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கவேண்டியது இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணையி்ன்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்ந்து இருப்பதால் உற்பத்திக்கு அனுமதி அளிக்கவேண்டும் என வேதாந்தா தரப்பில் கோரப்பட்டது.

ஆக்ஸிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்கள் வரை நீட்டிக்கவேண்டும் என்றும் வேதாந்தா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

இதற்கு பதில் அளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாததால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கவேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கமுடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்குவிசாரணையை, அடுத்த வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதுவரை தற்போதைய நிலையே தொடரும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.