மத்திய அரசு மீது தூத்துக்குடி எம்.பி கனிமொழி குற்றசாட்டு

48

நாடாளுமன்ற தொகுதிக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு சரியாக வழங்கவில்லை என்று தூத்துக்குடி எம்.பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில், தமிழ் அகாராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, பேருந்து நிலையம், பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை என்று தன்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார். மத்திய அரசு தங்களுக்கு தர வேண்டிய எம்.பி. நிதியை சரியாக வழங்கவில்லை என்றும் நிதியை அளித்தால் அதனை விரைவில் செய்து கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.