தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – 58 பேருக்கு சம்மன்

thoothukudi
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22- ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தின் போது நடந்த வன்முறை காரணமாக பொது மக்களுக்கு உயிரிழப்பு, காயங்கள் ஏற்பட்டன.

மேலும், தனியார் சொத்துகளுக்கும் சேதங்கள் உருவாகின.

Advertisement

அவை குறித்து விசாரிப்பதற்காக, சென்னை உயா் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார்.

இதனிடையே ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை இன்று நடக்கவுள்ள நிலையில் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.