தூத்துக்குடி 3வது மைல் பசும்பொன் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த மற்றொரு மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஜெபசிங் ஆகிய 3 பேரும் நேற்று திருமணவிழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின், இரவில் மது அருந்தியுள்ளனர்.
மதுபோதையில் மூவரும் 3வது மைல் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தூங்கி உள்ளனர்.
அதிகாலை இரண்டறை மணியளவில் சரக்கு ஏற்றி வந்த ரயில் 3 பேர் மீதும் ஏறியது.
இதில் மாரிமுத்து, மற்றொரு மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஜெபசிங் என்பவர் படுகாயமடைந்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.