திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

305

தூத்துக்குடி மாவட்டம் அபிராமி நகரை சேர்ந்த இளங்கோ என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததால், உடனடியாக காரை நிறுத்தியுள்ளார்.

காரில் இருந்தவர்கள் அனைவரும் கீழே இறங்கிய நிலையில், கார் தீப்பிடித்து எரிந்ததுள்ளது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீணை அணைத்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.