“ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சுதந்திரமாக எதையும் செய்ய முடியவில்லை”

140

அதிமுக-வை பாஜக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால், சுதந்திரமாக செயல்படாத கட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சுதந்திரமாக எதையும் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.