சாதி, மத வன்முறைகளை தடுக்க தனி உளவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சட்டம் இயற்றுவது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதிலை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.