‘எங்கள் பிரிவுக்கு இது தான் காரணம்’ விவாகரத்து பற்றி முதன்முறையாக மனம் திறந்த நாக சைதன்யா…!

253
Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடிக்கும் ‘கஸ்டடி’ திரைப்படம், தெலுங்கு மற்றும் தமிழில் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

பட ப்ரோமோஷன் பணிகளின் ஒரு பகுதியாக நாக சைதன்யா தெலுங்கு சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் சமந்தா உடனான விவாகரத்து பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

சமந்தா பற்றி பேசுகையில், அவர் இனிமையான நண்பர் மற்றும் அனைத்து மகிழ்ச்சிக்கும் தகுதியானவர் என கூறியுள்ள சைதன்யா, ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் தான் தங்களுக்குள் அசாதாரண சூழலை உருவாக்கியதாக பகிர்ந்துள்ளார்.

இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மரியாதை கலைந்து விட்டதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியது மோசமான விஷயம் எனக் கூறியுள்ள சைதன்யா, ஆழ்ந்த சிந்தனைகளுக்கு பிறகே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், பத்தாண்டுகளுக்கு மேலாக தாங்கள் நண்பர்கள் என கூறியுள்ள சைதன்யா, இந்த ஸ்பெஷல் ஆன பிணைப்பு தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.