சர்க்கரை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கரும்பில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றது,
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சர்க்கரையில் 70 சதவீதம் கரும்பு வழியாக தான் தயாரிக்கப்படுகிறது, மேலும் 30 சதவீதம் சக்கரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகின்றது, உலகளவில் உள்ள கரும்பு உற்பத்தியில் இந்தியா 2- ஆம் இடத்தில் உள்ளது, கரும்பில் இருந்து சர்க்கரை மட்டுமல்லாமல் வெல்லம் உள்ளிட்டவை கூட தயாரிக்கப்படுகின்றன.
36 வகையான கரும்பு வகைகள் உள்ள நிலையில், கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.
கரும்பு ஜூஸ் கல்லீரலை வலுப்படுத்தவும் கல்லீர நோய்களை குணப்படுத்தவும் மிக அதிகமாக உதவுகிறது, மஞ்சள் காமாலைக்கு நிரூபிக்கப்பட்ட தீர்வாகும், இதில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் நோய்த்தொற்றுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.
இதில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி மற்றும் கிளைகோலிக் அமிலங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்கள் மற்றும் சருமத்தின் பிரகாசத்தைப் பராமரிக்க உதவுகிறது. ஒரு டம்ளர் கரும்புச் சாற்றுடன் ஒரு துளி இஞ்சி சேர்த்துக் குடித்து வந்தால், கர்ப்பிணிப் பெண்களின் சுகவீனம் குறையும்.
கரும்புச் சாறில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, இது நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தாதுப் பற்றாக்குறையைத் தடுக்கவும் உதவும். கரும்புச் சாறு பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சாற்றைப் பிரித்தெடுத்தவுடன் உட்கொள்வதும் முக்கியம், ஏனெனில் அது 15 நிமிடங்களுக்குள் ஆக்ஸிஜனேற்றப்படும். பற்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் உடலுக்கு தேவையான நார்ச்சத்துகளை கொடுப்பது வரை எண்ணற்ற பலன்கள் கரும்பில் இருக்கிறது.