திருவாரூரில் நடந்த பழிக்கு பழி சம்பவம்

164

திருவாரூர் அருகே பழிக்கு, பழியாக நடைபெற்ற படுகொலை தொடர்பாக 7 பேர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

நன்னிலம் அடுத்துள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கொலை சம்பவம் குறித்து குடவாசல் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரன், சாமிநாதன், வெங்கடேஷ், ரமேஷ், கணபதி உள்ளிட்ட 7 பேர், உசிலம்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்டைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து, மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.