புதுமனை புகுவிழாவிற்கு பந்தல் கட்டும் பணியின் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

230

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பரவாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஈழவேந்தன்.

அவர் அருகில் உள்ள தளிக்கோட்டை பகுதியில் புதுமனை புகுவிழாவிற்கு பந்தல் போடும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவர் தூக்கி கொண்டு சென்ற இரும்பு கம்பி தெருவின் மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியில் பட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல், திருப்பூரில் இளைஞர்  ஒருவர் அவரது வீட்டின் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரை ஆன் செய்ய முற்பட்ட போது, திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.