கழன்று ஓடிய பள்ளி வாகனத்தின் டயர்

318

திருவாரூர் – நாகை புறவழி சாலையில் டிரினிடி அகடமி எனும் CBSE பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியின் வாகனம், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக கொடிக்கால்பாளையம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது வாகனத்தின் இடதுபக்க முன் டயர் திடீரென கழன்று ஓடியது.

வாகனம் சாலையில் இழுத்துச் சென்ற நிலையில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், வாகனம் நிறுத்தப்பட்டது.

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக சென்றபோது, இந்த விபத்து நடந்ததாலும், போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை என்பதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.