தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது கிடையாது ஆனால் வேண்டுமென்றே சிலர் தட்டுப்பாடு இருப்பதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என அமைச்சர் மா. சுப்ரமணியன்  தெரிவித்துள்ளார்.

89
Advertisement

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெங்களுரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து ஒரு கோடி மதிப்பில்ன கூடுதல் கட்டிடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன்  மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது கிடையாது வேண்டுமென்றே சிலர் தட்டுப்பாடு இருப்பதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என குற்றம்சாட்டினார்.  அவ்வாற தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் தாராளமாக 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என குறிப்பிட்டார்.  மேலும்  உடல் உறுப்பு தானங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என தேரிவித்தார்.