குன்றத்தூரில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், அடையாளம் தெரியாத வடமாநில இளைஞரின் சடலம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

60
Advertisement

 வெளியே மூன்று நாட்களுக்கு முன் நிறுத்தபட்ட காரில், நேற்று பார்க்கிங் லைட் எரிந்துள்ளது.

இதையடுத்து கோபிநாத், காரை மூடியிருந்த காரின் கவரை அகற்றியபோது, காருக்குள் சீட்பெல்ட் அணிந்த நிலையில், ஆண் சடலம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காருக்குள் இருந்த வடமாநில இளைஞரின் உடலை கைப்பற்றி, பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்தும், அவர் பூட்டப்பட்டிருந்த காருக்குள் எப்படி வந்தார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை திருட முயன்ற போது உள்ளே சிக்கி உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்து உடலை காருக்குள் போட்டுச் சென்றனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.