சைடுலாக்கை காலால் உடைத்து அலேக்கா பைக்கை அட்டையை போட்ட திருடன்

145
bike
Advertisement

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, மர்ம நபர் ஒருவர், வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

வேப்பூர் அடுத்த மலையனூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர், நேற்று இரவு அவரது வீட்டு வாசலில் தனது பைக்கை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார்.

காலையில் வந்து பார்த்தபோது, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை காணவில்லை.

Advertisement

தனது வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர் ஒருவர் முகக்கவசம் அணிந்து வந்து வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் சைடுலாக்கை காலால் உடைத்து பைக்கை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து காவல் நிலையத்தில் தேவராஜ் புகார் அளித்துள்ளதார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.