டீ கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

253

சென்னை வேளச்சேரியை சேர்ந்த முபாசிர் என்பவர் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார்.

அவர் வழக்கம்போல் இன்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு 57 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

Advertisement

இந்நிலையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அடையாளம் தெரியாத இரண்டு மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.