ஆளில்லாத வீட்டில் பீரோவை உடைத்து கொள்ளை

248

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியன் என்பவர், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்.

பின்னர் உறவினர் அளித்த தகவலின்பேரில், வீடு திரும்பிய பாலசுப்ரமணியன், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 50 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து, கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Advertisement