பல்லியை கண்டு பயப்படும் பெண்கள் இதை பாருங்க..

44
Advertisement

பொதுவாக பல  பெண்களுக்கு, வீட்டில் உலாவரும் பல்லிகள், கரப்பான் போன்ற பூச்சிகளை கண்டாலே ஆகாது.எதிர்பாராதவிதம் அதுபோன்ற பூச்சிகளை எதிர்கொண்டால் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள்.

ஆனால் இங்கோ, பெண் ஒருவர் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்புக்கு செல்லப்பிராணி போல முத்தமிடுகிறார்.ஸ்நேக் வேர்ல்ட் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோவில் , சுமார் 100 கிலோ எடையும் 15 அடி நீளமும் கொண்ட மலைப்பாம்பு ஓய்வெடுப்பதைக் காணலாம்.

அதே நேரத்தில்  பெண் பராமரிப்பாளர் ஒருவர் அதன் அருகில் சென்று  துணியால் பாம்பின் உடலை சுத்தம் செய்கிறார்.அந்த பெண் சுத்தம்  செய்வதை உணர்ந்த மலைப்பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக ரியாக்ட் செய்கிறது.

Advertisement

இதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த பொது, அந்த பெண் பாம்பின் தலையை தூக்கி முத்தமிடுகிறார்.அந்த பாம்பும் அவரை ஒன்றும் செய்யவில்லை.சில நிமிடங்கள் முத்தமிட்டு மீண்டும் பாம்பின் தலையை கீழ் விட்டுவிடுகிறார்.பார்ப்பதற்கே, மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.