காலி பணியிடங்கள் அப்படியே இருக்கு.. சீக்கிரம் தேர்வை நடத்தி ரிசல்ட் வெளியிடுங்க.. ஓபிஎஸ் கோரிக்கை…!

186
Advertisement

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்தும் இன்றும் 10,000 காலி பணியிடம் நிரப்பப்படவில்லை என்றும், ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி, முடிவடைந்த உடனேயே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோகத்தை ஏற்படுத்தியது.

அரசுத் துறைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு. அப்போதுதான் ஓர் அரசு திறம்பட செயல் முடியும். தி.மு.க அரசின் செயல்பாடு சிறப்பாக இல்லாததற்கு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததும் ஒரு காரணம் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.