கொரோனா நிவாரண நிதியில் ஊழல்! அதிர்ச்சியில் அமெரிக்கா

195

அமெரிக்காவில் கொரோனா நிவாரண நிதியில், குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டத்தில் ஆயிரத்து 914 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக 47 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மினசோட்டாவில் கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக புதிய நிவாரணத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கும் இந்த தனியார் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்காக, அமெரிக்க அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்நிலையில், இந்த திட்டத்தில் ஆயிரத்து 914 கோடி ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI விசாரணையை தொடங்கியுள்ளது