பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது…

153
Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் ஊக்கத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தாரர்கள் கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. வீரர் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை இன்று முதல் வருகிற 20 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.