1 கோடி யப்பு – விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!

467
Suffolk ram was sold by Richard Thompson,
Advertisement

அயர்லாந்தை சேர்ந்தவர் விவசாயி Richard Thompson.

இவர் Suffolk வகை ஆட்டுக்கிடாயை வளர்த்து வந்துள்ளார். பிறந்து 7 மாதங்களே ஆகியுள்ள இந்த கிடாயை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார் Richard.

அப்போது யாரும் எதிர்பாத்திரா வகையில் 44,000 யூரோக்களுக்கு ஆட்டுக்கிடாய் விற்பனையாகியுள்ளது.

Advertisement

இது இந்திய மதிப்பில் 1 கோடியே 3 லட்சத்து 89 ஆயிரத்து 596 ரூபாய் ஆகும்.

அயர்லாந்தில், ஒரு ஆடு இவ்வளவு தொகைக்கு விலை போயிருப்பது இதுவே முதல் முறை.

இதுகுறித்து Richard கூறுகையில், அதிக தொகைக்கு விற்பனையாகும் என தெரியும்., ஆனால் இவ்வளவு தொகைக்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

எது எப்படியோ ஒரு ஆட்டுக்கிடாய் 1 கோடி ரூபாயை தாண்டி விற்பனையாகியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.