மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்த ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ.க ஆதரவுடன் முதலமைச்சரானார்.
மேலும் சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தையும், ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றினார். இந்நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் நிலவரம்,
2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. சரத்பவார், ஏக்நாத் ஷிண்டே இடையேயான இந்த திடீர் சந்திப்பு, மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.