கோழிமுட்டை என நினைத்து பந்தை விழுங்கிய பாம்பு

31
Advertisement

சமீபத்தில் அமெரிக்காவின் கோல்ஃப் (Golf) மைதானம் ஒன்றில் , கோழி முட்டை என நினைத்து பாம்பு ஒன்று அங்கிருந்த இரண்டு கோல்ஃப் பந்துகளை விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது.

தகவலின்படி , கோல்ஃப் மைதானத்தை சுற்றித்திரிந்த பாம்பு ஒன்று வெள்ளை நிறத்தில் காணப்பட்ட பந்துகளை கோழி முட்டை என நினைத்து பசியில் விழுங்கியுள்ளது.இதையடுத்து, அங்கிருந்த வேலியில் நுழைய முயன்று சிக்கியிருத்த பாம்பை குறித்து வனவிலங்கு மையம் ஒன்றுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு ஊழியர்கள்,பந்தை விழுங்கி அவதிப்பட்டு வந்த அந்த பாம்பை பிடித்து,லாவகமாக இரண்டு பந்துகளையும் வெளியே எடுத்தனர்.இதனை அந்த வனவிலங்கு மையம் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது.