தன் இடத்தை ஆக்கிரமித்த பாம்பை  விடாமல் கொத்திய மரங்கொத்தி பறவை

46
Advertisement

பாம்புகள் பொதுவாக எலி போன்ற சிறு உயிரினங்களின் பொந்துகளில்  நுழைந்து உணவை குறிவைப்பவை ஆகும்.சில சமயங்களில்,பாம்புகளுடன் மற்ற சில பிராணிகளும்  தற்காப்பிற்காக சண்டையிடுவதும் உண்டு.

இந்நிலையில், இன்ஸ்டாவில் பகிர்ந்த இந்த வீடியோவில் பாம்பு ஒன்று மரத்தில் உள்ள  மரங்கொத்தியின் இடத்தில் நுழைந்து ஓய்வு எடுத்துள்ளது.சிறிது நேரம் கழித்து தன் இடத்திற்க்கு வந்த மரங்கொத்தி பறவை ஒன்று பாம்பு படுத்திருப்பதை கண்டு கோபமடைந்தது.

இதையடுத்து,தன்னுடைய இடத்திலிருந்து பாம்பை விரட்டும் நோக்கில்,அதை கோத்தத் தொடங்கியது.பாம்பும் மரங்கொத்தி உடன் போராடத்தொடங்கியது.இரண்டும் மாத்தி  மாத்தி தாக்கிக்கொள்கிறது.இரண்டும் விட்டுக்கொடுப்பது போல  தெரியவில்லை.அத்துடன் இந்த வீடியோ முடிகிறது.

Advertisement