சுருட்டி போட்ட மரக்காணம் …அந்த 10 திமுக சொன்ன பதில்….

14
Advertisement

பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்கள் வெறுத்துவிட்டார்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகளே சான்று’என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், ”சுற்றி வளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்ற தலைப்பில் மதுரையில் மாநாடு நடந்தது.. இந்த மாநாட்டில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “ஆர்எஸ்எஸ் – பாஜக கூட்டு களவாணிகளின் ஆட்சிதான் இந்தியாவை பாழ்படுத்தி உள்ளது. அவர்களுடைய சுரண்டல் வெறும் பொருளியல் சுரண்டல் மட்டும் கிடையாது.. சாதி, மதத்தின் பெயரால் பிரிவினைவாதத்தின் சுரண்டலாக வலுப்பெற்று வருகிறது.

இந்தியாவில் பாசிசத்துக்கு கூடுதல் பண்பு உள்ளது.. சனாதன பாசிசம் நம் நாட்டில் உள்ளது.. சாதியின், மதத்தின் பெயரால் மக்களைப் பாகுபாடு செய்யும் பண்பு, இங்கு மட்டுமே காணப்படுகிறது.