மீதியான உணவை இப்படித் தான் சாப்பிட வேண்டும்! ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதாவின் ஒற்றை மந்திரம்…

35
Advertisement

உணவை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது நோய்க் கிருமிகளை அழிப்பதுடன் உணவின் சுவையையும் தக்க வைக்கிறது.

அறிவியல் பூர்வமாக 165 Farenheat வெப்பத்தில் 15 நொடிகளுக்கு உணவை சூடுபடுத்தி சாப்பிடுவது சரியான முறையாக பார்க்கப்படுகிறது.

ஆனால், ஆயுர்வேத முறையில் மீதியான உணவை சாப்பிடுவதும், மீண்டும் உணவை சூடுபடுத்தி சாப்பிடுவதும் சத்துக்கள் குறைந்து போகும் வழியாகவும் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய வழிமுறையாகவும் பார்க்கப்படுகிறது.

பொதுவாக, 24 மணி நேரத்திற்கு முன் சமைக்கப்பட்ட உணவை உண்பதை தவிர்க்க மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும் அறிவுறுத்தி வரும் நிலையில், சமைத்து மூன்று மணி நேரத்திற்குள்ளாக உணவை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என ஆயுர்வேதா முறையை பின்பற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மீதியான உணவுகளை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு அஜீரணம், உப்புசம் மற்றும் பல உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். Fridgeஇல் வைத்து எடுத்து மீண்டும் சூடேற்றப்படும் உணவுகளின் ஊட்டச்சத்துக்கள் வெகுவாக குறைவதாக கூறும் ஆயுர்வேத மருத்துவர்கள், புதிதாக சமைக்கப்படும் உணவுகள் உடலின் ஆரோக்கியத்துக்கு பல வழிகளில் உதவுவதாகவும் கூடுமான வரையில் மீதியான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.