கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி…3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது…..

62
Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. Next  ராஜஸ்தான் அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். Next இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கொல்கத்தா அணியின் பந்து வீசை நாலாபுறமும் சிதறிடித்த அவர், 13 பந்துகளில் அரைசதம் அடித்து, ஐ.பி.எல் போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஜெய்ஸ்வாலின் அதிரடியாடில் ராஜஸ்தான் அணி 13 ஓவர்களில் இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.