அக்னிவீரர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது….

109
Advertisement

முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக, அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

4 ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டும் பணியில் நீடிக்கும் நிலையில், மற்றவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

முதல் பேட்ச் அக்னிவீரர்களுக்கு வயது உச்சவரம்பில் 5 ஆண்டுகளும், அதற்கடுத்த பேட்ச் அக்னிவீரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும் என்றும் உடல் தகுதி தேர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் ரயில்வே வாரியம் கூறியுள்ளது.