ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் இன்று கருத்து கேட்டறியப்படுகிறது.

256

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்கு செய்வது தொடர்பான கருத்துக்களை பகிர விரும்புவோர் குறிப்பாக பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்களை கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் இன்று கருத்து கேட்பு கூட்டம் உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி தலைமையில் நடைபெறுகிறது. ஆன்லைன் விளையாட்டு பற்றிய கருத்துக்களை பகிர விரும்பும் பொதுமக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.